2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

இந்தியன் வெல்ஸ்: வெளியேறினார் மறே

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 15 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியாவின் இந்தியன் வெல்ஸ் நகரத்தில் இடம்பெற்றுவரும் பி.என்.பி பரிபஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றில், உலகின் இரண்டாம் நிலை வீரரான பிரித்தானியாவின் அன்டி மறே, அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளார்.

கடந்த மாதம் தந்தையான பின் முதன்முறையாக ஏ.டி.பி தொடரில் பங்கேற்ற, இருபத்தெட்டு வயதான அன்டி மறே, 6-4, 4-6, 7-6 (7-3) என்ற செட்கணக்கில், தரவரிசையில் 53ஆம் இடத்திலுள்ள ஆர்ஜென்டினாவின்பெடேரிக்கோ டெல்போனிசிடம் தோல்வியுற்றார்.

இதேவேளை, உலகின் நான்காம் நிலை வீரரான சுவிற்ஸர்லாந்தின் ஸ்டியான் வொர்விங்கா, 6-4, 7-6 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 55ஆம் இடத்திலுள்ள அன்ட்ரே குஸ்நெட்சோவ்வை தோற்கடித்து நான்காம் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

தவிர, உலகின் ஏழாம் நிலை வீரரான தோமஸ் பேர்டிச், 6-1, 7-6 என்ற செட்கணக்கில் உலகின் 47ஆம் நிலை வீரரான குரோஷியாவின் போர்னா கோரிக்கை தோற்கடித்து நான்காம் சுற்றுக்குள் நுழைந்தார்.

இது தவிர, உலகின் பத்தாம் நிலை வீரரான பிரான்ஸின் ரிச்சர்ட் கஸ்கட், 2-6, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 29ஆம் இடத்திலுள்ள அலெக்ஸ்சான்டர் டொல்கோபொலோவ்வை தோற்கடித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .