2025 ஜூலை 09, புதன்கிழமை

ஓய்வு பெறுவதற்கு முரளிதரன் திட்டம்

Super User   / 2010 ஜூலை 06 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரன் சில தினங்களில் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதற்குத் திட்டமிடுவதாக பி.பி.சி. சிங்கள சேவை தெரிவித்துள்ளது.

இலங்கைக் கிரிக்கெட் சபையுடன் இது குறித்து முரளிதரன் கலந்துரையாடி வருவதாகவும் விரைவில் கிரிக்கெட் தெரிவுக் குழுவினரும் இது தொடர்பான கலந்துரையாடலில் இணைந்துகொள்வர் எனவும் முரளிதரனுக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள் காட்டி பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.

38 வயதான முத்தையா முரளிதரன், 132 டெஸ்ட் போட்டிகளில் 792 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனையாளராகத் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முரளிதரன் சகலவிதமான போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெற விரும்பக்கூடும் எனினும் அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலகக்கிண்ணப் போட்டிகள் வரையாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் அவரை தொடர்ந்தும் விளையாடச் செய்வதில் தெரிவுக் குழுவினர் வெற்றியீட்டுவார்களா என்பது தெரியவில்லை.

உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முரளிதரன், 337 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 515 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .