Editorial / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆசியக் கிண்ணத்தின் ஆரம்பப் போட்டியான, டுபாயில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இலங்கைக்கெதிரான போட்டியில் தனது மணிக்கட்டில் வெடிப்பொன்றுக்குள்ளான பங்களாதேஷின் சிரேஷ்ட வீரர் தமிம் இக்பால், சிம்பாப்வேக்கெதிரான தொடரைத் தவறவிடுவதற்கான வாய்ப்புகளைக் கொண்டுள்ளார்.
டுபாயிலிருந்து நேற்று பங்களாதேஷ் திரும்பிய தமிம் இக்பால், காயம் எதிர்பார்த்தபடி குணமடையாவிட்டால் சத்திரசிகிச்சையொன்றுக்கு செல்ல வேண்டிய வாய்ப்பு உள்ளது என்றவாறு கூறியுள்ளார்.
அவ்வாறு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டால், நான்கிலிருந்து ஆறு வாரங்கள் குணமடையத் தேவையென்ற நிலையில், அடுத்த மாதம் 21ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள சிம்பாப்வேக்கெதிரான தொடரை தவறவிடும் வாய்ப்புகளை தமிம் இக்பால் கொண்டுள்ளார்.
22 minute ago
31 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
31 minute ago
2 hours ago