2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

சம்பியனானது இங்கிலாந்து

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 12 , பி.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக றக்பி செவன்ஸ் தொடரில், இரண்டாவது பகுதிச் சுற்றாக தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற பகுதியின் சம்பியனாக, இங்கிலாந்து அணி தெரிவாகியுள்ளது. கேப் டௌணில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில், 19-17 என்ற புள்ளிகள் கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றே, இப்பிரிவின் சம்பியனாகத் தெரிவானது.

10 நாடுகளில் இடம்பெறும் இந்தத் தொடரின் முதலாவது சுற்று, டுபாயில் இடம்பெற்றிருந்தது. அதன் சம்பியன்களாக, தென்னாபிரிக்க அணி தெரிவாகியிருந்தது.
அடுத்த சுற்று, ஜனவரி 28, 29ஆம் திகதிகளில், நியூசிலாந்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--