2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

சென்னை டெஸ்டுக்குச் சிக்கல்?

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 07 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் தமிழகத்தின் முதலமைச்சல் ஜெயலலிதா ஜெயராமின் மரணத்தைத் தொடர்ந்து, இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் சென்னையில் இடம்பெறவுள்ள 5ஆவது டெஸ்ட் போட்டி தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளது.

அம்மாநிலத்தில் 3 நாட்களுக்கு துக்க தினமும் ஒரு வார அஞ்சலி செலுத்தும் வாரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவை முடிந்த பின்னரேயே, டிசெம்பர் 16ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள டெஸ்ட் இடம்பெறவுள்ளது. ஆனால், அங்கு நிலவும் துக்கமான நிலைமையைக் கருத்திற்கொண்டு, மாற்று ஏற்பாடுகளை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை மேற்கொண்டு வருகிறது. ஆனால், போட்டியை நடத்த முடியும் என, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், நம்பிக்கை வெளியிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--