2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

தடிப்பான துடுப்புகளுக்கு வருகிறது தடை?

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 07 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிரிக்கெட் துடுப்புகளின் தடிப்பத்தைக் கட்டுப்படுத்துவதற்கு, கிரிக்கெட் விதிகளைக் கட்டுப்படுத்தும் மெரிலிபோன் கிரிக்கெட் சபையின் உலக கிரிக்கெட் செயற்குழு, பரிந்துரைத்துள்ளது.

இன்றும் நேற்றும் மும்பையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தின் முடிவில், ஒழுக்க மீறல்களுக்காக வீரர்களை மைதானத்திலிருந்து வெளியே அனுப்புவதற்கான அதிகாரத்தை நடுவர்களுக்கு வழங்குதல், பிடியெடுக்கும் போது களத்தடுப்பாட்ட வீரரின் தலைக்கவசத்தில் பட்டும் பந்தைப் பிடிக்க அனுமதி வழங்குதல் போன்றனவும் உள்ளடங்குகின்றன.

எனினும், பந்தைச் சேதப்படுத்துதல் தொடர்பாகத் தற்போது காணப்படும் விதிகளில் மாற்றங்களை ஏற்படுத்தத் தேவையில்லை எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .