Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 மே 24 , பி.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடரில், இங்கிலாந்து அணியின் சிரேஷ்ட வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்சன் கலந்துகொள்ளுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஏற்பட்டுள்ள உபாதை காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளது.
தனது பிராந்திய அணியான லங்காஷையர் அணிக்காக விளையாடிக் கொண்டிருந்த போது, அன்டர்சனுக்கு உபாதை ஏற்பட்டது. மேற்கொள்ளப்பட்ட ஸ்கான்களில், அவரது வலது பக்க அடிவயிற்றுப் பகுதியில், கிழிவு ஏற்பட்டிருக்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே, லங்காஷையர் அணியின் அடுத்த போட்டியில் அவர் பங்குபெற மாட்டார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, ஜூன் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள, தென்னாபிரிக்க அணிக்கெதிரான முதலாவது டெஸ்டில், அவரது பங்குபற்றுகை குறித்துக் கேள்வியெழுந்துள்ளது.
தனது உபாதையிலிருந்து குணமடைய வேண்டியுள்ள அன்டர்சன், அதன் பின்னர் தனது உடற்றகுதியை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணி, ஜூலை மாத ஆரம்பத்திலிருந்து செப்டெம்பர் மாதத்துக்குள், 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. எனவே, முழுமையான உடற்றகுதியை அடையாமல் விளையாட முற்பட்டால், அவரது காயம், மேலும் அதிகமாக ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆகவே, அவர் முழுமையான உடற்றகுதியை அடைந்தால் மாத்திரமே, தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
19 minute ago
22 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
22 minute ago
40 minute ago