Shanmugan Murugavel / 2015 செப்டெம்பர் 30 , மு.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாதுகாப்பு காரணங்களுக்காக அவுஸ்திரேலிய அணியின் பங்களாதேஷுக்கான டெஸ்ட் தொடர் இரத்தாவது ஓரளவுக்கு உறுதியாகியுள்ள நிலையில், அவுஸ்திரேலிய டெஸ்ட் வீரர்கள், அவர்களது மாநில அணிகளுக்கான குழாமுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இருந்தபோதும் கிரிக்கெட் அவுஸ்திரேலியா இன்றே உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே காணப்படுகின்ற நிலையில், அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ள மடடோர் ஒருநாள் தொடருக்கு தயாராகும் வரையில், மாநில குழாம்களுடன் பயிற்சியை மேற்கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.
பங்களாதேஷில் உள்ள அவுஸ்திரேலியர்களின் பாதுகாப்பு தொடர்பில் சந்தேகமிருப்பதாக அவுஸ்திரேலிய அரசாங்கம், கிரிக்கெட் அவுஸ்திரேலியாவுக்கு ஆலோசனை வழங்கியதையடுத்தே, அட்டவனையின்படி திங்கட்கிழமை (28) புறப்படவிருந்த வீரர்களின் பயணம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு தலைமையதிகாரி சீன் கரோல், அணி முகாமையாளர் கவின் டோவி, அணியின் பாதுகாப்பு முகாமையாளர் பிராங்க் டிமசி ஆகியோர் பங்களாதேஷுக்கு சென்று அதிகாரிகளையும், பங்களாதேஷின் அவுஸ்திரேலிய தூதுவரையும் சந்தித்து நிலமைகளை ஆராய்ந்தபோது பங்களாதேஷ் கிரிக்கெட் சபைத் தலைவர் நஸ்முல் ஹசன் முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் தொடர் பெரும்பாலும் இடம்பெறும் என்றே எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
எனினும் அதைத் தொடர்ந்து டாக்கா இராஜதந்திர வலயத்தில் இத்தாலியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். இதனையடுத்து நிலைமை மாறியிருப்பதை பங்களாதேஷ் கிரிக்கெட் சபைத் தலைவர் நஸ்முல் ஹசன் ஒத்துக்கொண்டுள்ள நிலையிலும், வீரர்கள் மாநில அணிகளுக்கு அனுபப்பட்டுள்ள நிலையிலும், தொடர் நடைபெறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவடைந்துள்ளது.
2 minute ago
31 minute ago
40 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
31 minute ago
40 minute ago
3 hours ago