2021 மார்ச் 04, வியாழக்கிழமை

நிக் கிரியோஜிஸூக்கு தடை, அபராதம்

Shanmugan Murugavel   / 2015 ஓகஸ்ட் 26 , மு.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்டியான் வொர்விங்காவின் பெண் தோழி பற்றி பாலியல் அவதூறு கருத்துக்களை தெரிவித்த நிக் கிரியோஜிஸூக்கு 28 நாட்கள் இடைநிறுத்தமும், 25,000 அமெரிக்க டொலர்கள் அபராதமும் தொழில்முறையான டென்னிஸ் வீரர்களின் கூட்டமைப்பு விதித்துள்ளது.

இச்சம்பவம் இம்மாத ஆரம்பத்தில் ரோஜெர்ஸ் கிண்ண போட்டியொன்றின்போது இடம்பெற்றிருந்தது. தொழில்முறையான டென்னிஸ் வீரர்களின் கூட்டமைப்பின் ஆய்வில் 20வயதான கிரியோஜிஸ் மோசமான நடத்தையை வெளிப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

களத்தில் உள்ள மைக்ரோபோன்களால் பதிவு செய்யப்பட்டதன் படி கிரியோஜிஸூக்கு அனுமதிக்க முடியாத கருத்துக்களை தெரிவித்தற்காக 10,000 அமெரிக்க டொலர்கள் சுற்றுப்போட்டி அபராதம் விதிக்கப்பட்டிருந்தார்.
தரவரிசையில் 41வது இடத்தில் இருக்கும் கிரியோஜிஸ் மன்னிப்பு கோரியபோதும், பிரெஞ்ச் பகிரங்க சம்பியனான 30 வயதான வொர்விங்கா பாரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென வலியுறுத்தியிருந்தார்.

மொன்றியலில் இடம்பெற்ற ரொஜெர்ஸ் கிண்ணத்தின்போது பந்து எடுப்பவரிடம் விளையாட்டு முறைமையற்ற முறையில் கருத்து தெரிவித்ததுக்காக கிரியோஜிஸூக்கு 2,500 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .