Shanmugan Murugavel / 2016 ஜூலை 14 , பி.ப. 08:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் லோர்ட்ஸில் ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் முடிவில், தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் பாகிஸ்தான், ஆறு விக்கெட்டுகளை இழந்து 282 ஓட்டங்களைப் பெற்று நிதானமான நிலையில் உள்ளது.
ஸ்பொட் ஃபிக்சிங் காரணமாக தடைக்குள்ளாக்கப்பட்ட பாகிஸ்தானின் இளம் வேகப்பந்துவீச்சாளர் மொஹம்மட் ஆமிர், சம்பவம் நடைபெற்ற லோர்ட்ஸ் மைதானத்திலேயே டெஸ்ட் போட்டிகளில் மீள் வருகையை நிகழ்த்தவுள்ளமை காரணமாக எதிர்பார்க்கப்பட்டிருந்த இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், அதிக வயதில் டெஸ்ட் போட்டிகளில் சதம் பெற்ற அணித்தலைவராக மாறிய பாகிஸ்தான் அணியின் மிஸ்பா உல்-ஹக், சதம் பெற்ற பின்னர் தான் மேற்கொண்ட Push-Upகள் மூலமாக அனைவரது கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்துள்ளார்.
தற்போது, 110 ஓட்டங்களுடன் மிஸ்பா ஆட்டமிழக்காமல் உள்ளதோடு, முன்னர் ஆட்டமிழந்தோரில், அசாட் ஷஃபிக் 73, மொஹம்மட் ஹஃபீஸ் 40, யுனிஸ் கான் 33 ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக கிறிஸ் வோக்ஸ் 4, ஸ்டூவேர்ட் புரோட், ஜேக் போல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினை கைப்பற்றினர்.
இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேக் போல், சர்வதேசப் போட்டிகளில் தனது அறிமுகத்தை மேற்கொண்டிருந்தார். பாகிஸ்தான் அணியில், ஆமிர், வகாப் ரியாஸுக்கு மேலதிகமாக ரஹாட் அலி, மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தார்.
11 minute ago
18 minute ago
2 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
18 minute ago
2 hours ago
05 Nov 2025