2021 மே 08, சனிக்கிழமை

பங்களாதேஷுக்கான அவுஸ்திரேலிய தொடர் தாமதம்

Shanmugan Murugavel   / 2015 செப்டெம்பர் 27 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷுக்கான அவுஸ்திரேலிய அணியின் பயணத்தை தாமதப்படுத்த கிரிக்கெட் அவுஸ்திரேலியா எடுத்த தீர்மானத்துக்கு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அதிர்ச்சி அடைந்துள்ளது.

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் இறுதியான பயண ஆலோசனை தொடர்பில் பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கு அறிவித்த அவுஸ்திரேலியா கிரிக்கெட் சபை, பங்களாதேஷில் உள்ள நிலைமையை ஆராயுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இதற்கு பதிலலளித்துள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் சபை, அவ்வாறானதொரு அபாயமும் பங்களாதேஷில் காணப்படவில்லை என அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபைக்கு பதில் அனுப்பியுள்ளது. இவ்வருடம் மார்ச் மாதத்துக்கு பின்னர் நாட்டில் எந்தவொரு பாரிய அரசியல் வன்முறையும் இடம்பெறவில்லை எனத் தெரிவித்துள்ளது.

இதேவேளை தொடர் திட்டமிட்டபடி நடைபெறவேண்டும் என தெரிவித்துள்ள கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜேம்ஸ் சுந்தர்லாண்ட், எனினும் எமது வீரர்களினது எமது முக்கிய முன்னுரிமை என்று தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X