2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

பங்களாதேஷ் செல்லாமை குறித்து திருப்தியுடன் மோர்கன்

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 20 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ், இங்கிலாந்து அணிகளுக்கிடையில் அண்மையில் இடம்பெற்ற தொடரின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில் பங்குபற்றாமல் விட எடுத்த முடிவு குறித்து, திருப்தியுடன் காணப்படுவதாக, இங்கிலாந்து மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் அணியின் தலைவர் ஒய்ன் மோர்கன் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கருத்திற்கொண்டு, மோர்கனும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அலெக்ஸ் ஹேல்ஸும், அந்தத் தொடரில் பங்குபற்றுவதற்காக, பங்களாதேஷுக்குச் சென்றிருக்கவில்லை.

தற்போது, இந்திய அணிக்கெதிரான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடர் ஆரம்பிக்கவுள்ள நிலையில், அதற்காக இந்தியாவுக்குச் சென்றுள்ள ஒய்ன் மோர்கன், தான் எடுத்த முடிவு குறித்துத் திருப்தியுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

"பாதுகாப்புக் காரணங்களுக்காக, அங்கு பயணம் செய்வது தொடர்பில் நான் பாதுகாப்பாக உணரவில்லை. 'பங்களாதேஷில் காணப்படும் பாதுகாப்புக் காரணங்களுக்கு மத்தியில், அணித் தலைவராகவும் வீரராகவும், என்னால் சிறப்பாகச் செயற்பட முடியுமா?' என்ற கேள்வியை நான் எழுப்பினேன்" எனத் தெரிவித்த மோர்கன், "அந்த முடிவு குறித்து, இப்போதும் திருப்தியுடன் இருக்கிறேன். எனது முடிவை இங்கிலாந்து கிரிக்கெட் சபையிடம் உறுதிப்படுத்த முன்னர், நான் அனைத்தையும் கருத்திலெடுத்தேன்" என்று குறிப்பிட்டார்.

இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், இன்றுடன் நிறைவடைந்த நிலையில், 3 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளையும் 3 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளையும் கொண்ட மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடர், ஜனவரி 15ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. முதலில், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளே இடம்பெறவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--