2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

பட்டங்களை கைப்பற்றினர் அஸரெங்கா, ஜோக்கோவிச்

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 21 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்றுவரும் பி.என்.பி பரிபஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின் (இந்தியன் வெல்ஸ்) தொடரின் பட்டங்களை விக்டோரியா அஸரெங்காவும் நொவக் ஜோக்கோவிச்சும் கைப்பற்றினர்.

பெண்கள் பிரிவின் இறுதிப் போட்டியில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ஐக்கிய அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், 6-4, 6-4 என்ற செட் கணக்கில் உலகின் பதினைந்தாம் நிலை வீராங்கனையாகவிருந்த பெலாரஸ் வீராங்கனையான விக்டோரியா அஸரெங்காவிடம் தோல்வியுற்றார். இப்போட்டியில் வெற்றியீட்டியதன் மூலம் நேற்று வெளியிடப்பட்ட தரவரிசையில் எட்டாம் இடத்துக்கு விக்டோரியா அஸரெங்கா முன்னேறியுள்ளார்.

ஆண்கள் பிரிவின் இறுதிப் போட்டியில் உலகின் முதல்நிலை வீரரான சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச், 6-2, 6-0 என்ற செட் கணக்கில் உலகின் பன்னிரண்டாம் நிலை வீரரான கனடாவின் மிலஸ் ராவோனிச்சை தோற்கடித்தார். இது, நொவக் ஜோக்கோவிச்சின் 27ஆவது மாஸ்ட்டேர்ஸ் பட்டமென்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .