Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gopikrishna Kanagalingam / 2016 ஜூலை 10 , பி.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரி மோசடி தொடர்பாக 21 மாதங்களுக்குச் சிறை விதிக்கப்பட்டுள்ள ஆர்ஜென்டீனாவின் முன்னாள் வீரரும் பார்சிலோனாவின் வீரருமான லியனல் மெஸ்ஸி, அவரது தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி ஆகியோருக்கு ஆதரவான பிரசாரத்தை, பார்சிலோனா கழகம் ஆரம்பித்துள்ளது.
நாமெல்லோரும் லியனல் மெஸ்ஸி என்ற அர்த்தப்படும் #WeAreAllLeoMessi என்ற குறித்த பிரசார இயக்கத்தில், ‘தமது நிபந்தனையற்ற ஆதரவை சமூக ஊடக இணையத்தளங்களில் வழங்குவதனூடாக, உலகத்தில் மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கு அனுதாபத்தை வெளிப்படுத்துங்கள்” என, பார்சிலோனாவின் இரசிகர்களை, அக்கழகம் கேட்டுள்ளது.
கழகத்தின் இணையத்தளத்தில், ‘அவர் தனியாக இல்லை என்பதை நாம் லியோவுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘அனைத்து அங்கத்தவர்களும் கழக ஆதரவாளர்கள், வீரர்கள், ஊடகங்கள், ஏனையோர் அனைவரும் இதில் பங்குபற்றுவதற்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர்” என, அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த கழகத்தின் தலைவர் ஜோசப் மரியா பார்டோமியு, ‘லியோ, உங்களைத் தாக்குபவர்கள், பார்சிலோனாவையும் அதன் வரலாற்றையும் தாக்குகின்றனர். இறுதிவரை உங்களைப் பாதுகாப்போம். எப்போதும் இணைந்திருப்போம்” என்று தெரிவித்தார்.
பார்சிலோனாவின் நகர நீதிமன்றமொன்றால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மெஸ்ஸியும் அவரது தந்தையும், சிறைக்குச் செல்ல வேண்டியேற்படாது என்ற போதிலும், அபராதத்தைச் செலுத்த வேண்டியிருக்க வேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது.
32 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
6 hours ago