2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

பிறீமியர் லீக் : செல்சி, சிற்றி வெற்றி

Shanmugan Murugavel   / 2015 ஓகஸ்ட் 24 , மு.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளுக்கான போட்டிகளில், செல்சி, மன்செஸ்டர் சிற்றி அணிகள் வெற்றிபெற்றுள்ளது. செளதம்டன் - வட்ஃபோர்ட் அணிகளுக்கிடையிலான போட்டி, கோல்கள் பெறப்படாத சமநிலையில் முடிவடைந்தது.

செல்சி அணிக்கும் வெஸ்ட் ப்ரோம்விச் அல்பியன் அணிக்குமிடையிலான போட்டியில், 14ஆவது நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற பெனால்ட்டி வாய்ப்பை வெஸ்ட் ப்ரோம்விச் அணி தவறவிட்டது. எனினும், 20ஆம் 30ஆம் நிமிடங்களில் பெட்ரோ றொட்ரிகஸ், டியாகோ கொஸ்டா ஆகியோர் செல்சி அணி சார்பாக கோல்களைப் பெற்றனர். 36ஆவது நிமிடத்தில் ஜேம்ஸ் மொரிசன் பதிலடி வழங்க, 43ஆவது நிமிடத்தில் செல்சியின் சீசர் அஸ்பிலிகியூட்டா கோலொன்றை அடித்து, செல்சி அணிக்கு 3-1 என்ற முன்னிலையை வழங்கினார்.

போட்டியின் 55ஆவது நிமிடத்தில், செல்சியின் ஜோன் டெரிக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட, அந்த வாய்ப்பைப் பயன்படுத்திய ஜேம்ஸ் மொரிசன், 59ஆவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்றார். எனினும், மேலதிக கோல்கள் பெறப்படாத நிலையில், செல்சி அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

மன்செஸ்டர் சிற்றி அணிக்கும் எவேர்ட்டன் அணிக்குமிடையிலான போட்டியில், முதற்பாதியில் கோல்கள் பெற்றுக் கொள்ளப்பட்டிருக்கவில்லை. எனினும், 60ஆவது நிமிடத்தில் அலெக்சான்டர் கொலாரோவும் 88ஆவது நிமிடத்தில் சமிர் நஸ்ரியும் கோல்களைப் பெற்று, மன்செஸ்டர் சிற்றி அணிக்கு 2-0 என்ற வெற்றியைப் பெற்றுக் கொடுத்தனர். இது, அக்கழகம் பெற்றுக் கொண்ட 9ஆவது தொடர்ச்சியான வெற்றியென்பதோடு, அக்கழகத்துக்கான சாதனையாகும்.

இந்த வெற்றியுடன், புள்ளிகளின் அட்டவணையின் மன்செஸ்டர் சிற்றி அணி முதலிடத்திலும் லெய்செஸ்டர் சிற்றி அணி 2ஆம் இடத்திலும் மன்செஸ்டர் யுனைட்டட் அணி 3ஆவது இடத்திலும் காணப்படுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .