2021 மே 08, சனிக்கிழமை

பிளட்டர், பிளட்டினிக்கு 7 வருடத் தடை?

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 24 , பி.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடைக்காலத் தடைக்குள்ளாக்கப்பட்டு உள்ளவர்களான, சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவரான செப் பிளட்டருக்கும் ஐரோப்பிய கால்பந்தட்டாச் சங்கங்களின் ஒன்றியத் தலைவர் மைக்கல் பிளட்டினிக்கும், ஏழு வருடத் தடை விதிக்கப்படலாமெனத் தெரிவிக்கப்படுகிறது.

அவர்களிருவரின் மேலும் விதிக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டாலேயே, இந்தத் தண்டனை வழங்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

பிளட்டரின் ஆலோசகராக 2002ஆம் ஆண்டில் செயற்பட்டமைக்காக, 2011ஆம் ஆண்டில் பிளட்டினிக்கு வழங்கப்பட்ட 1.35 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ்கள் தொடர்பாகவே, அவர்களுக்கெதிரான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆலோசனைப் பணிக்கான, எழுத்துமூல ஒப்பந்தமேதும் காணப்படாததோடு, அப்பணிக்காக அவர் இரண்டுமுறை பணத்தைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையிலேயே, அவர்கள் மீதான விசாரணைகளை மேற்கொண்டுவரும் பீபா நன்னெறி விசாரணையாளர்கள், கால்பந்தாட்டத்திலிருந்து ஏழு வருடங்கள் தடை விதிப்பதற்கான தங்கள் பரிந்துரையை, ஏற்கெனவே வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான முழுமையான தீர்ப்பு, கிறிஸ்துமஸ்ஸ{க்கு முன்னர் வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X