Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2016 டிசெம்பர் 15 , பி.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
பந்தைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டில், போட்டி ஊதியத்தின் 100 சதவீதமும் அபராதமாக விதிக்கப்பட்ட தென்னாபிரிக்காவின் ஃபப் டு பிளெஸி, அந்தத் தீர்ப்புக்கெதிராக மேற்கொண்டுள்ள மேன்முறையீட்டிலிருந்து விலகப் போவதில்லை என அறிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற தொடரின் 2ஆவது போட்டியின் போது, தனது வாயில் இனிப்பொன்றை வைத்துக் கொண்டு, அதன் ஈரத்தை ஃபப் டு பிளெஸி, பந்தில் தேய்க்கும் காணொளி வெளியானது. அதைத் தொடர்ந்து, அது தொடர்பான விசாரணை இடம்பெற்றே, அவருக்கான தண்டனை வழங்கப்பட்டது.
அந்தத் தொடரில் தற்காலிகத் தலைவராக இருந்த அவர், இடம்பெறவுள்ள இலங்கைக்கெதிரான தொடர் முதல், நிரந்தர டெஸ்ட் தலைவராகச் சேர்க்கப்பட்டுள்ளார். எனவே, மேன்முறையீட்டை வாபஸ் பெறுவது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. "வாபஸ் பெறுவது தான், தர்க்கரீதியாகச் சிறந்தது போன்று தெரிகிறது. ஆனால், அது கையாளப்பட்ட விதம், அது இடம்பெற்ற விதம், எவ்வாறு அந்த விசாரணை இடம்பெற்றது, இவ்வாறான விசாரணைகள் எவ்வாறு இடம்பெறுகின்ற போன்ற விடயங்கள் குறித்து எனக்கு ஏற்புக் கிடையாது. நான் ஏற்றுக் கொள்ளாத ஒரு விடயத்தை எதிர்ப்பது தான், அணித்தலைவர் செய்யக்கூடியது" என்று அவர் குறிப்பிட்டார்.
ஃபப் டு பிளெஸி மேற்கொண்டுள்ள மேன்முறையீட்டில் அவர் தோல்வியடைந்தால், போட்டித் தடையை எதிர்கொள்வார் என்ற ஆபத்துக்கு மத்தியிலேயே, அவர் இந்த மேன்முறையீட்டை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago