Shanmugan Murugavel / 2016 ஜூலை 21 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரச ஆதரவுடனான ஊக்கமருந்துத் திட்டம் இடம்பெற்றதாக கூறப்பட்டதையடுத்து, ரஷ்ய தடகள வீரவீராங்கனைகளுக்கான ஒலிம்பிக் தடை நீடிக்கிறது.
உலக தடகள வீரர்களை ஆளும் உடலினால் விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்குவதற்கு, ரஷ்ய ஒலிம்பிக் செயற்குழுவும் ரஷ்ய தடகள வீரர்கள் 68 பேரும் முயற்சி செய்தபோதும், குறித்த இடைக்காலத் தடையானது தொடரும் என விளையாட்டுக்கான தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
எவ்வாறெனினும் இன்னும் சில வாரங்களில் பிரேஸிலின் றியோ டி ஜெனீரோவில் ஆரம்பிக்கவுள்ள ஒலிம்பிக்கில், குறிப்பிடத்தக்களவான ரஷ்ய தடகள வீரர்கள், சுயாதீனமாக பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அரச ஆதரவுடனான ஊக்க மருந்துத் திட்டம் தொடர்பான இரண்டாவது அறிக்கை வெளியானமையைத் தொடர்ந்து, ஒலிம்பிக் போட்டிகளின் அனைத்து விளையாட்டுக்களிலிருந்தும் அனைத்து ரஷ்ய போட்டியாளர்களையும் தடை செய்வதற்கான கோரிக்கைகள் குறித்து சர்வதேச ஒலிம்பிக் செயற்குழு ஆராய்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
26 minute ago
27 minute ago
38 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
27 minute ago
38 minute ago
46 minute ago