2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

வொர்விங்காவிடம் தோல்வியுற்று வெளியேறினார் மரே

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 21 , மு.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்று வரும் தொழில்முறை டென்னிஸ் வீரர்களுக்கான கூட்டமைப்பின் உலக தொடர் இறுதிகளின் இறுதி குழு நிலைப் போட்டிகளில், உலகின் இரண்டாம் நிலை வீரரான பிரித்தானியாவின் அன்டி மரே, 7-6(7-4), 6-4 என்ற நேர் செட்களில் உலகின் நான்காம் நிலை வீரரான  சுவிட்சர்லாந்தின் ஸ்டியான் வொர்விங்காவிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.

இதேவேளை, உலகின் ஐந்தாம் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால்,  தனது இறுதிக் குழுநிலைப் போட்டியில், தரவரிசையில் ஏழாம் இடத்திலுள்ள சக நாட்டு வீரரான டேவிட் பெரரை, 6-7(2-7), 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, குழு நிலைப் போட்டிகளில் வெல்லப்படாத வீரராக அரையிறுதிக்குச் செல்கிறார்.

வெற்றி பெற்ற வொர்விங்கா, இன்று இடம்பெறவுள்ள இரண்டாவது அரையிறுதிப்போட்டியில், தரவரிசையில் மூன்றாமிடம் வகிக்கும் சக நாட்டவரான ரோஜர் பெடரருடன் பலப்பரீட்சை நடாத்தவுள்ளார்.

இன்று, முன்னதாக இடம்பெறவுள்ள முதலாவது அரையிறுதிப் போட்டியில் தரவரிசையில் ஐந்தாம் இடத்தில் இருக்கும் ஸ்பெயினின் ரஃபேல் நடால், உலகின் முதல் நிலை வீரரான சேர்பியாவின் நோவாக் ஜோகோவிச்சை சந்திக்கவுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X