Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Shanmugan Murugavel / 2016 மே 23 , மு.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
செவில்லாவுடனான கோப்பா டெல் ரே இறுதிப் போட்டியில் பத்து வீரர்களுடன் விளையாடிய பார்சிலோனா, மேலதிக நிமிடங்களில் பெறப்பட்ட இரண்டு கோல்களினால் 28ஆவது தடவையாக கோப்பா டெல் ரே கிண்ணத்தை வென்றதோடு, இவ்வருட லீக், கிண்ணம் என இரண்டிலும் வெற்றியைக் பெற்றுக் கொண்டது.
செவில்லாவின் கெவின் கமெய்ரோவின் சீருடையைப் பிடித்து இழுத்தமைக்காக போட்டியின் 36ஆவது நிமிடத்திலேயே பார்சிலோனாவின் பின் மத்திய கள வீரரான ஜேவியர் மஷாரானோ நேரடியாக சிவப்பு அட்டை காட்டப்பெற்று மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட 10 வீரர்களுடனேயே பார்சிலோனா அணி விளையாடியது.
ஒரு வீரர் குறைவாக இருப்பதால் முன்கள அதிரடி தாக்குதல் வீரர்களான நேமர், லூயிஸ் சுவாரஸ், லியனல் மெஸ்ஸி ஆகிய மூவரில் ஒருவர் பின்கள வீரர் ஒருவரால் பிரதியீடு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டபோதும் தற்காலிக ஏற்பாடாக மத்திய களத்திலிருந்த சேர்ஜியோ புஷ்கட்ஸை பின் களத்துக்கு மாற்றி விளையாடிய பயிற்சியாளர் லூயிஸ் என்றிக்கே, இடைவேளையின் பின்பு மத்திய கள வீரர் இவான் றகிடிக்குக்கு பதிலாக ஜெரேமி மத்தியூவை களமிறக்கி பின்களத்தில் விளையாட வைத்திருந்ததுடன் முன்கள தாக்குதல் ஆட்டத்தை நிறுத்தியிருக்கவில்லை. எவ்வாறெனினும் இரண்டாவது பாதியின் 12ஆவது நிமிடத்தில் சுவாரஸ் காயமடைந்த நிலையில், அவர், மத்திய கள வீரர் ரஃபின்ஹாவால் பிரதியீடு செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், போட்டியின் வழமையான நேரத்தில் இரண்டு அணிகளும் கோல்களைப் பெறாத நிலையில், போட்டி மேலதிக நேரத்துக்குச் சென்றது. அதில், மெஸ்ஸி வழங்கிய இரண்டு பந்துகளை முறையே ஜோர்டி அல்பாவும் நேமரும் கோலாக்க, 2-0 என்ற கோல்கணக்கில் பார்சிலோனா வென்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
43 minute ago
47 minute ago
50 minute ago