2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

15 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்தாட்டத்தில் காலி றிச்மண்ட் கல்லூரி சம்பியன்

Super User   / 2010 ஒக்டோபர் 18 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் ஏற்பாடு செய்த பாடசாலைகளுக்கிடையில் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கான சுற்றுப் போட்டியில் காலி றிச்மண்ட் கல்லூரி சம்பியனானது.

திருகோணமலை மெக்கெய்சர் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கோட்டை ஹேவவிதாரண கல்லூரியை 4 : 3 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டு றிச்மன்ட் கல்லூரி சம்பியினானது.

இத்தொடரின் மூன்றாம் இடத்தினை  திருகோணமலை முள்ளிப்பொத்தணை அல்.ஹிஜ்ரா வித்தியாலயத்தை எதிர்த்து விளையாடிய சிலாபம் ஆனந்தா கல்லூரி 2: 1 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டது.

கிழக்கு மாகாண சுகாதார விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.சுபைர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றிக் கிணத்ததை வழங்கி வைத்தார்.

இப்பரிசளிப்பு விழாவில் கிழக்கு மாகண சபையின் பிரதி தவிசாளர் ஆரியவதி கலபதி, திருகோணமலை நகர சபை தலைவர் க.செல்வராசா ஆகியோரும் கலந்து கொண்டனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--