2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

இலங்கை, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 2ஆவது போட்டி இன்று

Suganthini Ratnam   / 2013 ஜூலை 26 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணிக்கும் இலங்கை அணிக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 2ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ள இப்போட்டி இன்று பிற்பகல் 2.30 இற்கு ஆரம்பிக்கவுள்ளது.

இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் இத்தொடர் இலங்கை அணி வசமாகும்.

இலங்கை அணி சார்பாக முதல் இரண்டு போட்டிகளிலும் பங்குபற்றியிருக்காத இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் இன்றைய போட்டியில் பங்குபற்றவுள்ளார்.

முதலிரண்டு போட்டிகளிலும் அவர் சர்வதேச கிரிக்கெட் சபையின் தடை காரணமாக பங்குபற்றியிருக்க முடிந்திருக்கவில்லை. இலங்கை அணியின் இளம் வீரரான லஹிரு திரிமன்ன இன்றைய போட்டியில் பங்குபற்றுவாரா என்ற சந்தேகம் காணப்படுகிறது.

இரண்டாவது போட்டியில் அவர் பெருவிரலில் காயமடைந்திருந்தார். இன்றைய போட்டியில் லஹிரு திரிமன்ன பங்குபற்றாதுவிடின், ஜெஹான் முபாரக்கிற்கு இன்னொரு வாய்ப்புக் கிடைக்கப் பெறும்.

இன்றைய போட்டியில் மழையின் குறுக்கீடு காணப்படலாம் என்ற அச்சம் காணப்படுகிறது. நேற்றைய தினத்தில் கண்டியில் மழை காணப்பட்டிருக்காதபோதிலும், இன்றைய தினத்தில் மழை பெய்யலாம் எனக் கருதப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் அணிகள்:

இலங்கை: உபுல் தரங்க, திலகரட்ண டில்ஷான், குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்தன, அஞ்சலோ மத்தியூஸ், டினேஷ் சந்திமால், ஜெஹான் முபாரக், திஸர பெரேரா, ரங்கன ஹேரத், லசித் மலிங்க, ஷமின்ட எரங்க

தென்னாபிரிக்கா: குயின்டன் டீ கொக், அல்விரோ பீற்றர்சன், ஜே.பி.டுமினி, ஏபி.டி.வில்லியர்ஸ், பஃப் டு பிளெஸிஸ், டேவிட் மில்லர், றொபின் பீற்றர்சன், றயன் மக்லரன், ஆரொன் ஃபங்கிசோ, மோர்னி மோர்க்கல், கிறிஸ் மொறிஸ்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--