2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

மைலோ றக்பி கிண்ணத் தொடரின் இரண்டாவது அரையிறுதியில் றோயல் கல்லூரி வெற்றி

A.P.Mathan   / 2010 ஜூலை 15 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


பாடசாலை மட்டத்திலான 20 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பங்குபற்றும் ‘மைலோ கிண்ண’ றக்பி போட்டியின் இரண்டாவது அரையிறுதிப்போட்டி இன்று றோயல் கல்லூரிக்கும் வெஸ்லிக் கல்லூரிக்குமிடையில் நடைபெற்றது. இப்போட்டியில் 20-12 என்ற புள்ளிகள் விகிதத்தில் றோயல் கல்லூரி வெற்றிபெற்றுள்ளது.
 
இத்தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் சென்.பீற்றர்ஸ் கல்லூரியும் இசிபத்தான கல்லூரியும் மோதின. எனினும் பார்வையாளர்கள் இடையூறு விளைவித்ததன் காரணமாக அப்போட்டி மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டி எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
  Comments - 0

  • irshad Wednesday, 04 August 2010 10:35 PM

    ரோயல் கல்லுரி விளையாட்டு துறையில் சிறந்த கல்லூரியாகும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--