2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

திருமலை லீக் கால்பந்தாட்டத்தில் ஒலிம்பிக்ஸ் கழகம் சம்பியன்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 12 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை கால்பந்து லீக் நடத்திய "விலக்கல் முறை" சுற்றுப் போட்டியில் ஒலிம்பிக்ஸ் கழகம் இவ்வருடத்துக்கான சம்பியன் கிண்ணத்தை சசுவீகரித்துக் கொண்டது.

திருகோணமலை, மெக்ஹெய்சர் விளையாட்டு மைதானத்தில் கடந்த சனிக்கிழமை இச்சுற்றுப்போட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் ஒலிம்பிக்ஸ், பிக்புட், ஈஸ்ரன் ஈகிள்ஸ், பற்றிமா, ஜமாலியா, புனித அந்தோனி, கிறீன்லைட் கழகங்களும் பங்குகொண்டிருந்தன.

இறுதிப்போட்டி நேற்று புதன்கிழமை மாலை நடைபெற்றது. இதில் ஒலிம்பிக்ஸ் கழகத்தை எதிர்த்து கிறீன்லைட் கழகம் மோதியது. இப்போட்டியில் ஒலிம்பிக்ஸ் கழகம் 3 : 2 என்ற கோல்கணக்கில் கிறீன்லைட் கழகத்தை வெற்றி கொண்டு சம்பியனானது.

திருகோணமலை பொலிஸ் அத்தியட்சகர் ரத்மலவின பண்டார பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு  பரிசில்களை வழங்கி வைத்தார். ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு சவால் கிண்ணத்துடன் 10,000 ரூபா பணப்பரிசும், இரண்டாவது இடத்தினைப் பெற்றுக் கொண்ட கிறீன்லைட் அணிக்கு 5,000 ரூபாவும் பரிசாக வழங்கி வைக்கப்பட்டன.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--