Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஓகஸ்ட் 26 , பி.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
அடுத்த மாதம் நடைபெறவுள்ள சம்பியன்ஸ் லீக் டுவெண்டி-20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ள வயம்ப (வடமேல் மாகாண) அணி இப்போட்டிகளின்போது பாலியல் உந்துசக்தி மருந்தொன்றை ஊக்குவிக்கவுள்ளது.
'முஸ்லி பவர்' எனும் பாலியல் உந்து சக்தி மருந்தையே வயம்ப அணி ஊக்குவிக்கவுள்ளதாக இந்தியாவின் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
இச்சுற்றுப்போட்டி குறித்த செய்தியாளர் மாநாட்டில் பங்குபற்றிய வயம்ப அணியின் முன்னணி வீரர் ஒருவர் தனது உத்தியோகபூர்வ அங்கியில் மேற்படி செக்ஸ் தூண்டல் மருந்;து இலச்சினை அச்சிடப்பட்டிருந்ததை அவதானித்து சங்கடத்திற்குள்ளானதுடன் நிகழ்ச்சி முடிந்தவுடன் தனது ஆடையை மாற்றுவதற்கு விரைந்து சென்றதாகவும் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.
ஆனால், அம்மருந்தை தயாரிக்கும் நிறுவனம் வயம்ப அணிக்கு அனுசரணை வழங்குவதால் அவ்வணி வீரர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் போட்டியின்போது மேற்படி செக்ஸ் உந்துசக்தி மருந்து இலச்சினை அவர்களின் அங்கிகளில் பொறிக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இம்மருந்து ஆண்களுக்கும் பெண்களும் பாலியல் தூண்டல்களை ஏற்படுத்தும் என மேற்படி நிறுவனத்தின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'நாம் இந்தியாவில் நம்பர் வன். வயம்ப அணி இலங்கையின் நம்பவர் வன். இருதரப்பினரும் சேர்ந்து உலகின் நம்பர் வன் அணியாகுவோம் என இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆப்ரஹாம் தெரிவித்துள்ளார்.
ஜெஹான் முபாரக் தலைமையிலான வயம்ப அணி கடந்த வருடம் இலங்கையில் நடைபெற்ற மாகாணங்களுக்கிடையிலான போட்டியில் சம்பியனாகியதன் மூலம் சம்பியன்ஸ் லீக் போட்டிகளில் இலங்கையின் சார்பில் பங்குபற்ற தகுதி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
ஜெஹான் முபாரக் தலைமையிலான இவ்வணியில் மஹேல ஜயவர்தன, அஜந்த மெண்டிஸ் ரங்கன ஹேரத், திசேர பெரேரா பர்வீஸ் மஹ்ரூப் மஹேல உடவத்த முதலான வீரர்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செப்டெம்பர் 10 முதல் 26 ஆம் திகதிவரை சம்பியன்ஸ் லீக் 20 ஓவர் சுற்றுப்போட்டி நடைபெறவுள்ளது.
இலங்கை, இந்தியா அவுஸ்திரேலியா இங்கிலாந்து தென்னாபிரிக்கா நியூஸிலாந்து மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முதல்நிலை அணிகள் இப்போட்டிகளில் பங்குபற்றவுள்ளன.
10 minute ago
32 minute ago
42 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
32 minute ago
42 minute ago
43 minute ago