A.P.Mathan / 2010 செப்டெம்பர் 11 , மு.ப. 08:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(நவம்)
இலங்கை விமானப்படையின் பலாலி படைப் பிரிவுக்கும் யாழ்ப்பாணம் ஜொனியன்ஸ் விளையாட்டு கழகத்திற்கும் இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டி ஆட்டத்தில் விமானப் படையணி வெற்றி பெற்றுள்ளது.
யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தலைமையகம்- யாழ்ப்பாணம் கிரிக்கெட் சங்கத்துடன் இணைந்து நடத்திய, பொதுமக்களுடனான நல்லுறவைப் பேணும் இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி ஆட்டத்தில் இலங்கை விமானப்படையின் பலாலி அணி சம்பியனாகியது.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை விமானப்படையின் பலாலி அணியும் யாழ்ப்பாணம் ஜொனியன்ஸ் விளையாட்டுக் கழக அணியும் மோதிக்கொண்டன.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற விமானப் படையணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்ததைத் தொடர்ந்து ஜொனியன்ஸ் விளையாட்டுக்கழகம் துடுப்பெடுத்தாடியது.
அவ்வணி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 99 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. ஹரிவதனன் 43, லவேந்திரா 16, காண்டீபன் 10 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்கள்.
மிகவும் குறைந்த ஓட்டத்தில் ஜொனியன்ஸ் விளையாட்டுக் கழகம், விக்கெட்டுக்களை இழந்து கொண்டிருந்த நிலையில் களம் இறங்கிய ஹரிவதனனின் பொறுப்பான ஆட்டத்தின் மூலம் ஜொனியன்ஸ் விளையாட்டுக் கழகம் குறிப்பிடத்தக்க ஓட்டங்களைப் பெற்றது.
விமானப் படையணியைச் சேர்ந்த நதிபா 03 ஓவர்கள் பந்து வீசி 13 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுகளையும், இந்திக்கா 03 ஓவர்கள் பந்து வீசி 13 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுகளையும், நுகாபொல 04 ஓவர்கள் பந்து வீசி 15 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுகளையும், குணவர்த்தனா 04 ஓவர்கள் பந்து வீசி 14 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய விமானபடையணி 11.4 ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 103 ஓட்டங்களை இலகுவாகப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது. பிரேமரத்னா 34, நதிரா 27, பெரெரா ஆட்டமிழக்காது 20 ஓட்டங்களை பெற்றதுடன் உதிரிகளாக 16 ஓட்டங்களும் பெறப்பட்டன.
ஜோனியன்ஸ் விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்த காண்டீபன் 03 ஓவர்கள் பந்து வீசி 16 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
போட்டியின் ஆட்டநாயகனாக ஜொனியன்ஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த ஹரிவதனனும் சிறந்த களத்தடுப்பாளராக ஜொனியன்ஸ் விளையாட்டுக்கழக விக்கெட் காப்பாளர் பிரணவனும் ஆட்ட நாயகனாக விமானப் படையணியைச் சேர்ந்த நதிராவும் தொடர் ஆட்டநாயகனாக இலங்கை இராணுவத்தை சேர்ந்த வம்படி விதாரணாவும் போட்டிகளின் நாயகனாக ஹரிஜெயவர்த்தனாவும் தெரிவு செய்யப்பட்டார்கள்.
இப்போட்டியில் சம்பியனாக விமானப் படையணியும் இரண்டாம் இடத்தை யாழ்ப்பாணம் ஜொனியன்ஸ் அணியும் மூன்றாம் இடத்தை இலங்கை இராணுவமும் பெற்றுக் கொண்டது.
.jpg)

.jpg)
.jpg)
.jpg)
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025