2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

இலங்கை – மேற்கிந்திய போட்டி மழையினால் பாதிப்பு

Super User   / 2010 நவம்பர் 17 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

இலங்கை – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இன்றைய மூன்றாவது நாள் ஆட்டம் மழை காரணமாக 30 ஓவர்களுடன் நிறுத்தப்பட்டது.

காலியில் நடைபெறும் இப்போட்டியில் இரண்டாவது நாளான நேற்றைய ஆட்டமுடிவின்போது இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 54 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

நேற்று 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த பரணவிதான, இன்று மேலதிக ஓட்டமெதுவுமின்றி ஆட்டமிழந்தார். குமார் சங்கக்கார 73 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.

போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டபோது இலங்கை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 165 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. மஹேல ஜயவர்தன 51 ஓட்டங்களுடனும் திலான் சமரவீர 11 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
அதன்பின் கடும் மழை பெய்யத் தொடங்கியதால் மீண்டும் ஆட்டம் ஆரம்பமாகவில்லை.

தற்போது மேற்கிந்திய அணி 415 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது. நாளை காலை உரிய நேரத்தைவிட அரைமணித்தியாலம் முன்னதாக காலை 9.30 மணிக்கு ஆட்டம் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .