2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மேற்கிந்திய அணியில் மீண்டும் சர்வான்

Super User   / 2011 ஜனவரி 21 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

உலக கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்காக மேற்கிந்திய அணியில் மீண்டும் ராம் நரேஷ் சர்வான் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் இலங்கைக்கு வந்த மேற்கிந்திய அணியில் சர்வான் இடம்பெறவில்லை. கடந்த ஜுன் மாதம் தென்னாபிரிக்காவுடனான போட்டிகளில் பங்குபற்றியபின் எந்தவொரு சர்வசே ஒருநாள் போட்டிகளிலும் அவர் விளையாடவுமில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.

தினேஸ் ராம்டினுக்குப் பதிலாக ஜமைக்காவைச் சேர்ந்த விக்கெட் காப்பாளர் கார்ல்ட்ன் போஹ் சேர்க்கப்பட்டுள்ளார். 20 ஓவர் போட்டிகளில் பிரகாசித்த கிரோன் போலாரட்டும் இவ்வணியில் இடம்பெற்றுள்ளார்.

அணி விபரம்:
டெரன்சமி (தலைவர்) அட்ரியன் பாரத், கார்ல்டன் போஹ், சுலைமான் பென், டெரன் பிராவோ, ட்வைன் பிராவோ, சிவ்நாரின் சந்தர்போல். கிறிஸ் கைல், நிகிட்டா மில்லர்,  கிரோன் போலார்ட், ரவி ராம்போல், கமேர் ரோச், அந்த்ரோ ரஸல், ராம் நரேஷ் சர்வான், ட்வைன் ஸ்மித்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .