Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Super User / 2011 ஜனவரி 23 , பி.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய அணியுடனான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் 5 ஆவது போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றியீட்டியுள்ளது. இதன் மூலம் இத்தொடரின் வெற்றியையும் 3-2 விகிதத்தில் தென்னாபிரிக்க அணி கைப்பற்றியுள்ளது.
இன்று சென்சூரியனில் நடைபெற்ற இப்போட்டியில் நிர்ணயிக்கப்படட 46 ஓவர்களில் தென்னாபிரிக்க அணி 9 விக்கெட் இழப்பிற்கு 250 ஓட்டங்களைப் பெற்றது. ஹாசிம் அம்லா 116 ஓட்டங்களைப் பெற்றார்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணிக்கு டக்வேர்த் லூயிஸ் முறையில் 46 ஓவர்களில் 268 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலையை எதிர்கொண்டது.
அவ்வணி60 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் 5 ஆவது விக்கெட்டையும் இழந்தது. யூஸுப் பதான் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய 70 பந்துகளில் 105 ஓட்டங்களைப்பெற்றார். 8 சிக்ஸர்கள், 8 பெண்டரிகளையும் அவர் விளாசினார். எனினும் இந்திய அணியின் தோல்வியை தவிர்க்கமுடியவில்லை.
இறுதியில் 40.2 ஓவர்களில் 234 ஓட்டங்களைப் பெற்றநிலையில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் தென்னாபிரிக்க அணி டக்வேர்த் லூயிஸ் முறையில் 24 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. 5 ஆவது போட்டியின் சிறப்பாட்டக் காரராக ஹாசிம் அம்லாவும் சுற்றுப்போட்டியின் சிறப்பாட்டக் காரராக மோர்ன் மோர்கெலும் தெரிவாகினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago