2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

நடப்புச் சம்பியனின் வெற்றிப் பயணம் தொடர்கிறது

Super User   / 2011 பெப்ரவரி 21 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற போட்டியில் ஸிம்பாப்வே அணியை நடப்புச் சம்பியனான அவுஸ்திரேலிய அணி 91 ஓட்டங்களால் தோற்கடித்தது.

இந்தியாவின் அஹமதாபாத் நகரில் பகல் -இரவு ஆட்டமாக நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில்  6 விக்கெட் இழப்பிற்கு 271 ஓட்டங்களைப் பெற்றது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஷேன் வட்ஸன் 79 ஓட்டங்களைப் பெற்றார். மைக்கல் கிளார்க் ஆட்டமிழக்காமல் 58 ஓட்டங்களைப் பெற்றார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே அணி 46.2 ஓவர்களில் 161 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

அவ்வணியின் சார்பில் அதிக பட்சமமாக பின்வரிசை வீரர் கிறேம் கிறீமர் 37 ஓட்டங்களைப் பெற்றார்.

அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களில் மிட்சல் ஜோன்ஸன்  19 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஷேன் வட்ஸன் இப்போட்டியின் சிறப்பாட்டக் காரராக தெரிவானார்.

அவுஸ்திரேலிய அணி இறுதியாக 2003, 2007 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகக்கிண்ணத் தொடர்களில் ஒரு போட்டியில்தானும் தோல்வியடைவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0

  • Roshanmessi Wednesday, 23 February 2011 03:50 AM

    வாட்சன் இஸ் கிரேட் பட்ஸ்மன். ஹி இஸ் எ hero.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .