A.P.Mathan / 2011 பெப்ரவரி 24 , பி.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்குமிடையிலான இன்றைய கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட மேற்கிந்திய அணியை அழைத்தது. அதற்கமைய 47.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 222 ஓட்டங்களை மாத்திரமே மேற்கிந்திய அணியினால் பெற முடிந்தது. மேற்கிந்திய அணி சார்பில் அதிகப்படியாக பிறாவோ 73 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்திருந்தார். பந்துவீச்சில் இம்ரான் தாஹிர் 41 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் ஸ்டெய்ன் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் போதா 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர். மேற்கிந்திய தீவுகள் அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிரிஸ் கெய்ல் 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 42.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து இலகுவாக வெற்றி இலக்கினை அடைந்துகொண்டது. தென்னாபிரிக்காவில் துடுப்பாட்ட வீரர் ஏபி டி வில்லியர்ஸின் அதிரடி துடுப்பாட்டம் இலகுவான வெற்றிக்கு வழிகோலியது. 2 சிக்ஸர்கள் 8 பௌண்டரிகள் அடங்கலாக 107 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்காமல் களத்திலிருந்து தென்னாபிரிக்க அணியின் வெற்றிக்கு வித்திட்டவர் இவர்தான். இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் வில்லியர்ஸ் தெரிவுசெய்யப்பட்டார்.
17 minute ago
18 minute ago
49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
18 minute ago
49 minute ago
1 hours ago