Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை
Super User / 2011 ஜூன் 10 , பி.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்திய அணியுடனான டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றவுள்ள இந்திய அணியிலிருந்து வேகப்பந்துவீச்சாளர்களான ஸஹீர்கான், சாந்தகுமரன் ஸ்ரீசாந்த் ஆகியோர் காயம் காரணமாக இன்று வெள்ளிக்கிழமை விலகியுள்ளனர்.
ஸஹீர்கானுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீசாந்த்துக்கு வலது முழங்கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் குணமடைவற்கு இன்னும் சிறிது காலம் செல்லும் என இந்திய கிரக்கெட் சபையின் செயலாளர் என்.ஸ்ரீநிவாசன் தெரிவித்தார்.
இவ்விரு வீரர்களும் தற்போதை நடைபெறும் மேற்கிந்திய அணியுடனான ஒருநாள்போட்டிகளிலும் பங்குபற்றவில்லை. எனினும் டெஸ்ட் தொடரில் பங்குபற்றுவர் என முன்னர் எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் இவர்கள் குணமடையாததால் அபிமன்யு மிதுன், பிரவீன் குமார் ஆகியோர் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய இந்திய அணி விபரம்: எம்.எஸ்.டோனி (தலைவர்), வி.வி.எஸ். லக்ஸ்மன் (உபதலைவர்), முரளி விஜய், அபினவ் முகந்த், ராகுல் திராவிட், விராட் கோலி, எஸ்.பத்ரிநாத், ஹர்பஜன்சிங், இஷாந்த் சர்மா, பிரவீன் குமார , அமித் மிஸ்ரா, பிரக்யான் ஓஜா, அபிமன்யு மிதுன், முனாவ் பட்டேல், சுரேஷ் ரெய்னா, பார்த்திவ் பட்டேல்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago
8 hours ago