2025 ஜூலை 02, புதன்கிழமை

விஜய் மல்லையாவின் நிறுவனத்திற்கு எதிராக ஹர்பஜன்சிங் வக்கீல் நோட்டீஸ்

Super User   / 2011 ஜூலை 18 , பி.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னிலை சுழற்பந்துவீச்சாளரான ஹர்பஜன்சிங், பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவின் யூ.பி. ஸ்பிரிட்ஸ் நிறுவனத்திற்கு எதிராக வக்கீல்நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஹர்பஜன் சிங்கை இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் எம்.எஸ்.டோனி கேலி செய்யும் தொலைக்காட்சி விளம்பரமொன்றை வெளியிட்டமைக்காகவே  இந்த அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளது.

ஹர்பஜன்சிங்கின் வழக்கறிஞர் மூலம் அவரின் தாயார் அவதார் கௌர் இந்த அறிவித்தலை அனுப்பியுள்ளார்.

இந்த விளம்பரம் மூலம் ஹர்பன்சிங், அவரின் குடும்பம், சீக்கிய சமூகம் ஆகியன கேலி செய்யப்படுவதாக இந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தவறை ஏற்றுக்கொண்டு விளம்பரத்தை வாபஸ் பெறவேண்டும்,  அதிகம் வாசிக்கப்படும் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் மன்னிப்பு கோரி விளம்பரம் பிரசுரிக்க வேண்டும். இந்த அறிவித்தல் செலவுக்காக ஒரு லட்சம் இந்திய ரூபா வழங்க வேண்டும். தவறினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

55 வயதான விஜய் மல்லையா, பல வர்த்தக நிறுவனங்களினதும் பெங்களூர் ரோயல் சலெஞ்சர்ஸ் அணியினதும் உரிமையாளர் ஆவார்  என்பது குறிப்பிடத்தக்கது.
 


You May Also Like

  Comments - 0

  • xlntgson Tuesday, 19 July 2011 09:39 PM

    ஒரு லட்சம் எந்த மூலைக்கு? மது வியாபாரத்தில் இலட்சம் கோடி தேடி இருப்பார் மல்லையா! காந்தியின் இந்தியா மது வரியில் மகிழ்கிறது, ஹர்பஜன் சிங் இதைப் போன்று பன்மடங்கு தொகைக்கு வழக்கு எடுத்து வெல்ல வாழ்த்துகிறேன், கடைசி வரை நின்று பிடிப்பாரா, பார்ப்போம்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .