Super User / 2011 செப்டெம்பர் 12 , பி.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது.
பள்ளேகல சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடைபெற்ற இப்போட்டியின் 4 ஆவது நாளான நேற்றைய ஆட்டமுடிவின்போது இலங்கை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 223 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ஆனால் இன்று பிற்பகல் 307 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் இலங்கை அணியின் 5 ஆவது விக்கெட் வீழ்ந்தது.
இலங்கை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 317 ஓட்டங்களைப் பெற்று நெருக்கடியில் இருந்தபோது மழை பெய்யத் தொடங்கியது. அதன்பின் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது இலங்கை அணி 80 ஓட்டங்களால் மாத்திரேம முன்னிலையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக அவுஸ்திரேலிய வீரர் மைக் ஹஸி தெரிவானார்.
இத்தொடரின் 3 ஆவதும் இறுதியுமான போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் எதிர்வரும் 16 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
.jpg)
2 hours ago
2 hours ago
2 hours ago
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
24 Jan 2026