2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

இங்கிலாந்துடனான ஒருநாள் தொடரில் இந்திய அணிக்கு வெற்றி

Super User   / 2011 ஒக்டோபர் 20 , பி.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இங்கிலாந்து அணியுடனான 3 ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது. முதல் 3 போட்டிகளிலும் வென்ற இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட இத்தொடரின் வெற்றியையும் தனதாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மொஹாலியில் இன்று புதன்கிழமை நடைபெற்ற  3 ஆவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 298 ஓட்டங்களைக் குவித்தது. ஜொனதன் ட்ரோட் ஆட்டமிழக்காமல் 98 ஓட்டங்களையும் சமிட் பட்டேல் ஆட்டமிழக்காமல் 70 ஓட்டங்களையும் பெற்றனர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 49.2 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது. கடைசி ஓவரில் 7 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த ஓவரின் முதல்இருபந்துகளிலும் தலா 4 ஓட்டங்களை அடித்தார் அணித்தலைவர் எம்.எஸ்.டோனி.

இந்திய அணியின் சார்பில் அஜின்கியா ரெஹானே 91 ஓட்டங்களையும் கௌதம் காம்பீர் 51  ஓட்டங்களையும் பெற்றனர். டோனி ஆட்டமிழக்காமல் 35 ஓட்டங்களைப் பெற்றார். இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக ரெஹானே தெரிவானார்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .