2021 ஜனவரி 16, சனிக்கிழமை

முதலிடத்திற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன: டோணி

A.P.Mathan   / 2012 நவம்பர் 08 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்தாண்டு இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இழந்த டெஸ்ட் முதலிடத்தைக் கைப்பற்றுவதற்கான முயற்சிகள் இடம்பெற்றுவருவதாக இந்திய அணியின் தலைவர் மகேந்திரசிங் டோணி தெரிவித்துள்ளார். முதலிடத்தைக் கைப்பற்ற முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

முதலிடத்தைக் கைப்பற்றுவதற்கான திட்டம் எப்போதும் காணப்படுவதாகத் தெரிவித்த மகேந்திரசிங் டோணி, எந்த வகையிலான போட்டியில் பங்குபற்றினாலும், அந்தப் போட்டிகளில் முதலிடத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதே இலக்காகக் காணப்படுவதாகத் தெரிவித்த அவர், முதலிடத்தைப் பெற்றுக்கொள்வது மெதுவான ஒரு தொடர்ச்சி எனவும் தெரிவித்தார்.

இந்திய அணி தனது முதலிடத்தை இழந்த இங்கிலாந்து அணிக்கெதிராகவே அடுத்த தொடரில் பங்குபற்றவுள்ள நிலையில் அது குறித்துக் கருத்துத் தெரிவித்த மகேந்திரசிங் டோணி, இங்கிலாந்திற்கெதிரான தொடர் சுவாரசியமானதாக அமையும் எனத் தெரிவித்தார்.

இங்கிலாந்து அணி சிறந்த அணி எனத் தெரிவித்த மகேந்திரசிங் டோணி, ஆனால் தங்கள் அணியின் பலங்களையும், பலவீனங்களையும் ஆராய்ந்து அதனடிப்படையில் போட்டியில் பங்குபற்றுவ வேண்டும் எனத் தெரிவித்ததோடு, தொடர்ச்சியாக முன்னேறிக்கொண்டு இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இங்கிலாந்து அணிக்கெதிரான தொடருக்கு முன்னர் இந்திய அணி மும்பையில் ஒரு கிரிக்கெட் முகாமொன்றில் பங்குபெறவுள்ளதாகத் தெரிவித்த அவர், அங்கு சில பயிற்சிப் போட்டிகளிலும் பங்குபெறவுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதற்போட்டி எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளமை குறுிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .