2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

சிறப்பாக விளையாடி தொடர் வெற்றியை பெற்றோம்: மஹேல

Super User   / 2012 நவம்பர் 11 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரைக் கைப்பற்றியுள்ள நிலையில் இத்தொடரில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தியதன் காரணமாக இத்தொடரைத் தங்களால் வெல்ல முடிந்தது என இலங்கை அணியின் தலைவர் மஹேல ஜெயவர்தன தெரிவித்தார்.

ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டி மழையால் கைவிடப்பட்ட பின்னர் அடுத்த 3 போட்டிகளையும் இலங்கை அணி வெற்றிகொண்டு ஒரு போட்டி நிறைவாக உள்ள நிலையிலேயே தொடரைக் கைப்பற்றியுள்ளது.

வானிலை காரணமாக இத்தொடர் கடினமான ஒரு தொடராக காணப்பட்டதாகத் தெரிவித்த மஹேல ஜெயவர்தன, இத்தொடரில் இலங்கை அணி புத்தி சாதுர்யமாக விளையாடியதன் காரணமாக இத்தொடரை வெற்றி கொள்ள முடிந்ததாக தெரிவித்தார்.

இத்தொடரின் அனைத்துப் போட்டிகளும் மழை காரமாகப் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இலங்கை அணி நிலைமைகளைச் சரிவரக் கையாண்டிருந்ததாகத் தெரிவித்த மஹேல ஜெயவர்தன, நேற்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று இரண்டாவதாக துடுப்பெடுத்தாடியமை இலங்கை அணிக்குச் சாதகமாக அமைந்ததாகத் தெரிவித்தார்.

இத்தொடரின் போட்டிகளில் பார்வையாளர்கள் குறைவான அளவில் பார்வையிட வந்திருந்த போதிலும் அதற்கு மோசமான வானிலையே காரணமாக அமைந்ததாக மஹேல ஜெயவர்தன தெரிவித்தார்.

மழை காரணமாக போட்டிகள் பாதிக்கப்படும் நிலையில் அதிக மக்கள் பார்வையிட வருவது சாத்தியமற்றது எனவும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .