2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

இந்திய, இங்கிலாந்து முதலாவது டெஸ்ட் போட்டி நாளை

A.P.Mathan   / 2012 நவம்பர் 14 , பி.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணிக்கும், இந்திய அணிக்குமிடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி நாளை ஆரம்பிக்கவுள்ளது.

அஹமதாபாத்தில் ஆரம்பிக்கவுள்ள இந்தப் போட்டி இலங்கை நேரப்படி காலை 9.30 இற்கு ஆரம்பிக்கவுள்ளது.

இங்கிலாந்தில் வைத்து இந்திய அணி சந்தித்த 0-4 என்ற தோல்விக்குப் பழி தீர்க்கும் முகமாக இத்தொடரை இந்திய அணி வெற்றிகொள்ள முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படும் அதேவேளை, தங்களால் இந்திய உப கண்டத்தில் வைத்து டெஸ்ட் வெற்றிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என இங்கிலாந்து அணி நிரூபிக்க முயற்சிக்கும் தொடராக இது அமையவுள்ளது.

இரு அணிகளின் சார்பிலும் உடல் உபாதைகள் சம்பந்தமான கேள்விகள் எழுப்பப்பட்டிருந்த போதிலும் நாளை ஆரம்பிக்கவுள்ள போட்டிக்கான அணிகள் ஓரளவு முழு உடற்தகுதியுடன் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி சார்பாக ஷகீர் கான், விரேந்தர் செவாக் ஆகியோரின் உடற்தகுதிகள் தொடர்பான கேள்விகள் காணப்பட்ட போதிலும், அவர்கள் இருவரும் முழுமையான உடற்தகுதியை அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இசாந்த் சர்மாவின் உடற்தகுதி தொடர்பான சந்தேகம் நிலவுகின்ற போதிலும் அவர் முதலாவது போட்டியில் பங்குபற்றுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படாததால் அவரது உபாதை இந்திய அணிக்குப் பாதிப்புக்களை ஏற்படுத்தாது.

இங்கிலாந்து அணி சார்பாக ஸ்டீவன் ஃபின் முதலாவது போட்டியில் பங்குபற்ற மாட்டார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் ஸ்ருவேர்ட் ப்ரோட் நாளைய போட்டியில் பங்குபற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனைய வீரர்கள் முழுமையான உடற்தகுதியுடன் காணப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்க்கப்படும் அணிகள்:

இங்கிலாந்து:
அலஸ்ரெயர் குக், நிக் கொம்ப்டன், ஜொனதன் ட்ரொட், கெவின் பீற்றர்சன், இயன் பெல், சமித் பட்டேல், மற் பிரயர், கிரேம் ஸ்வான், ஸ்ருவேர்ட் ப்ரோட், ரிம் பிரெஸ்னன், ஜேம்ஸ் அன்டர்சன்

இந்தியா:
விரேந்தர் செவாக், கௌதம் கம்பீர், செற்றேஸ்வர் புஜாரா, சச்சின் டெண்டுல்கர், விராத் கோலி, யுவ்ராஜ் சிங், மகேந்திரசிங் டோணி, ரவிச்சந்திரன் அஷ்வின், உமேஷ் யாதவ், ஷகீர் கான், பிரக்ஜான் ஓஜா.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .