2021 ஜனவரி 23, சனிக்கிழமை

டெஸ்ட் தரப்படுத்தலில் சங்கா முதலிடம்

A.P.Mathan   / 2012 நவம்பர் 20 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


சர்வதேசக் கிரிக்கெட் சபையின் டெஸ்ட் வீரர்களுக்கான தரப்படுத்தலில் இலங்கை வீரர்கள் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தியுள்ளனர். துடுப்பாட்ட வீரர்களுக்கான தரப்படுத்தலில் குமார் சங்கக்கார தொடர்ந்தும் முதலிடத்தில் காணப்படுவதோடு, பந்துவீச்சாளர்களுக்கான தரப்படுத்தலில் ரங்கன ஹேரத் தொடர்ந்தும் முன்னேற்றத்தை வெளிப்படுத்தி நான்காவது இடத்தைப் பெற்றுள்ளார்.

நடந்து முடிந்த இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி, பங்களாதேஷ் - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான போட்டி, இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி ஆகியவற்றின் பின்னரான தரப்படுத்தலிலே இந்த நிலை காணப்படுகிறது.

இதில் நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் 11 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி போட்டியின் நாயகன் விருதை வென்ற ரங்கன ஹேரத் 828 புள்ளிகளைப் பெற்று தரப்படுத்தலில் தனது சிறப்பான புள்ளிகளைப் பெற்றதோடு 4ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.

நியூசிலாந்திற்கெதிரான போட்டியில் தான் துடுப்பெடுத்தாடிய ஓர் இனிங்ஸில் ஓட்டங்களைப் பெரிதளவில் குவிக்காத குமார் சங்கக்கார புள்ளிகளை இழந்த போதிலும் தொடர்ந்தும் முதலிடத்தில் காணப்படுகிறார்.

தவிர, அப்போட்டியில் இலங்கை சார்பாக 91 ஓட்டங்களைப் பெற்ற இலங்கை அணியின் தலைவர் மஹேல ஜெயவர்தன 6 இடங்கள் முன்னேறி 13ஆவது இடத்திலும், அப்போட்டியில் அரைச்சதம் பெற்ற அன்ஜலோ மத்தியூஸ் 28ஆவது இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளனர்.

துடுப்பாட்ட வீரர்களுக்கான தரப்படுத்தல்:
குமார் சங்கக்கார
ஹசிம் அம்லா
ஜக்ஸ் கலிஸ்
மைக்கல் கிளார்க்
ஷிவ்நரின் சந்தர்போல்
ஏ.பி.டி.வில்லியர்ஸ்
அலஸ்ரெயர் குக்
யுனிஸ் கான்
அஷார் அலி
கிரேம் ஸ்மித்
மைக்கல் ஹசி
மிஸ்பா உல் ஹக்
கெவின் பீற்றர்சன்
மஹேல ஜெயவர்தன
திலான் சமரவீர

பந்துவீச்சாளர்களுக்கான தரப்படுத்தல்:
டேல் ஸ்ரெய்ன்
வேர்ணன் பிலாந்தர்
சயீட் அஜ்மல்
ரங்கன ஹேரத்
பிரக்ஜான் ஓஜா
பென் ஹில்பன்ஹோஸ்
ஜேம்ஸ் அன்டர்சன்
பீற்றர் சிடில்
மோர்னி மோர்க்கல்
கேமர் ரோச்
அப்துர் ரெக்மான்
கிரேம் ஸ்வான்
ஸ்ருவேர்ட் ப்ரோட்
ஷகீர் கான்
ஷகிப் அல் ஹசன்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .