2021 ஜனவரி 27, புதன்கிழமை

அதிக ஓட்டங்களைப் பெற விரும்புகிறேன்: அன்ஜலோ மத்தியூஸ்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 24 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அணி சார்பாக அதிக ஓட்டங்களைப் பெற விரும்புவதாக இலங்கை அணியின் உப தலைவர் அன்ஜலோ மத்தியூஸ் தெரிவித்துள்ளார். குறிப்பாக பெரிய ஓட்ட எண்ணிக்கைகளைப் பெற விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலத்தில் அன்ஜலோ மத்தியூஸ் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியான பெறுபேறுகளை வெளிப்படுத்தி வருகின்ற போதிலும், இதுவரை 11 அரைச்சதங்களையும், ஒரு சதத்தையும் மாத்திரம் பெற்றுள்ளார்.

இலங்கையின் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளர் மார்வன் அத்தப்பத்துவுடன் இணைந்து தனது துடுப்பாட்டம் தொடர்பாக அதிக கடும் பயிற்சிகளை மேற்கொண்டதாகவும், அண்மைக்காலத்தில் 70, 80 ஓட்டங்களைப் பெறுவதாகவும், ஆனால் பெரிய ஓட்ட எண்ணிக்கையொன்றைப் பெற்றுக் கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார்.

இவ்வாறான 70, 80 ஓட்டங்கள் மூலம் அணிக்கோ, தனக்கோ தான் சிறந்த நன்மைகளை வழங்குவதாகத் தான் எண்ணவில்லை எனவும் தெரிவித்தார்.

இந்த 70, 80 ஓட்டங்களைத் தான் மிகப்பெரிய ஓட்டங்களாக மாற்ற வேண்டுமெனத் தெரிவித்த அவர், சதங்களைப் பெற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதிக ஓட்டங்களைப் பெறாமைக்குத் தனது கவனத்தைச் சிதற விடுவது காரணமாகக் காணப்படலாம் எனத் தெரிவித்த அவர், 70, 80 ஓட்டங்களுக்கு அருகில் செல்லும் போது மேலும் சிறப்பான மனநிலையுடன் காணப்பட வேண்டும் எனவும், சதங்களைப் பெறுவதற்குத் தயாராக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இலங்கை அணி அவுஸ்திரேலியாவிற்கெதிரான இரண்டாவது போட்டியில் மெல்பேர்ணில் 26ஆம் திகதி பங்குபற்றவுள்ள நிலையில், இலங்கை சார்பாக சிறந்த ஃபோர்மில் காணப்படும் வீரராக அன்ஜலோ மத்தியூஸ் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .