2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

இலங்கையின் சிறந்த நண்பன் ரொனி கிரெய்க்: குமார் சங்கக்கார

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 31 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் கிரிக்கெட்டை ரொனி கிரெய்க் வேறு யாரும் செய்யாதளவிற்கு முன்னிலைப்படுத்தினார் என இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். ரொனி கிரெய்க் இற்கு அஞ்சலி செலுத்தும் முகமாகவே சங்கக்கார இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவரும், நேர்முக வர்ணனையாளருமான ரொனி கிரெய்க், தனது 66ஆவது வயதில் நுரையீரல் புற்றுநோயால் மரணமடைந்தார். இலங்கையோடு நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்த ரொனி கிரெய்கின் மரணம் இலங்கையர்களை அதிகம் கவலைக்குள்ளாக்கியுள்ளது.

ரொனி கிரெய்கின் மரணம் கிரிக்கெட் உலகிற்கு மிகப்பெரிய இழப்பு எனத் தெரிவித்த குமார் சங்கக்கார, இது மிகவும் கவலைக்குரியது எனவும், தான் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ரொனி கிரெய்க் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி அறிந்ததும் தான் மிகுந்த அதிர்ச்சியடைந்ததாகத் தெரிவித்த குமார் சங்கக்கார, அவரின் மரணம் மிகப்பெரிய அதிர்ச்சியை வழங்கியதாகத் தெரிவித்தார்.

இலங்கையின் கிரிக்கெட்டை மிகவும் அன்புடன் அரவணைத்துக் கொண்டவராக ரொனி கிரெய்க் அறியப்படுவார் எனத் தெரிவித்த குமார் சங்கக்கார, இலங்கையை முன்னிலைப்படுத்துவதற்கும், இலங்கையை உலகம் முழுவதும் சிறந்த நிலையில் பரப்புரை செய்தவர் என்ற ரீதியில் ரொனி கிரெய்க் முக்கியமானவர் எனத் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .