2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

உள்வரும் வீரர்கள் சிறப்பாகச் செயற்படுவர்: மைக்கல் ஹசி

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 31 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது ஓய்விற்குப் பின்னர் அவுஸ்திரேலிய அணியில் இடம்பெறும் வீரர் சிறப்பான பெறுபேற்றை வெளிப்படுத்துவார் என நம்புவதாக அவுஸ்திரேலிய அணியின் மத்தியவரிசைத் துடுப்பாட்ட வீரர் மைக்கல் ஹசி தெரிவித்துள்ளார்.

37 வயதான மைக்கல் ஹசி, தனது இறுதி டெஸ்ட் போட்டியாக இலங்கைக்கெதிராக சிட்னியில் ஜனவரி 3ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளார். அத்தோடு அவுஸ்திரேலியாவின் இந்தப் பருவகாலத்துடன் அவர் சகல சர்வதேசப் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறவுள்ளார்.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள மைக்கல் ஹசி, அணியைப் பற்றித் தான் கவலைப்படவில்லை எனவும், மிகச்சிறப்பான வீரர்கள் வாய்ப்பிற்காகக் காத்திருப்பதாகவும், மிக அதிகமானோர் அவ்வாறு காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

கிரிக்கெட் வரலாற்றின் படி வீரர்கள் வருவதும், போவதுமாக இருந்த போதிலும் கிரிக்கெட் தொடர்ந்தும் முன்னேறிக் கொண்டிருப்பது தெளிவானதாக உள்ளதாகத் தெரிவித்த அவர், தனது விடயத்திலும் அவ்வாறே காணப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்த ஆண்டில் ஓய்வினை அறிவிக்கும் அவுஸ்திரேலியாவின் இரண்டாவது மிகப்பெரிய துடுப்பாட்ட வீரர் மைக்கல் ஹசி ஆவார். ஏற்கனவே அவுஸ்திரேலியாவின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் றிக்கி பொன்டிங் இதற்கு முன்னைய தொடரோடு ஓய்வுபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .