2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

அவுஸ்ரேலிய, மேற்கிந்தியத் தீவுகள் போட்டி நாளை

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 05 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்ரேலியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும், அவுஸ்ரேலிய அணிக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 3வது போட்டி நாளை இடம்பெறவுள்ளது. கன்பெராவில் இடம்பெறவுள்ள இப்போட்டி நாளை காலை 08.50 இற்கு ஆரம்பிக்கவுள்ளது.

இத்தொடரின் முதலாவது போட்டியில் 70 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுக்களையும் இழந்து படுதோல்வியைத் தழுவிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, இரண்டாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி முன்னேற்றத்தை வெளிப்படுத்தியிருந்த போதிலும், தோல்வியடைந்திருந்தது.

இந்நிலையில் நாளை இடம்பெறவுள்ள போட்டியில் வெற்றிபெற்றால் அவுஸ்ரேலிய அணி தொடரைக் கைப்பற்றிவிடும் என்ற நிலையில், நாளைய போட்டியில் வெற்றிபெற்று இத்தொடரைத் தொடர்ந்தும் உயிர்ப்பான நிலையில் வைத்திருக்க வேண்டிய தேவை மேற்கிந்தியத் தீவுகளுக்கு உண்டு.

மேற்கிந்தியத் தீவுகள் அணி இத்தொடரில் சிறப்பான ஆரம்பத்தைப் பெற்றுக் கொண்டிருக்காத நிலையில் அவ்வணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெயில் மீதான எதிர்பார்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுகின்றன.

அவுஸ்ரேலிய அணியின் ஷேன் வொற்சன் மீண்டும் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுவதோடு, சுழற்பந்து வீச்சாளரான ஷேவியர் டோகேர்ட்டியும் இடம்பெறுவார் எனக் கருதப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் அணிகள்:
அவுஸ்ரேலியா: ஷேன் வொற்சன், ஆரொன் ஃபின்ச், பிலிப் ஹியூஸ், மைக்கல் கிளார்க், ஜோர்ஜ் பெய்லி, மத்தியூ வேட், கிளென் மக்ஸ்வெல், ஜேம்ஸ் ஃபோள்க்னர், மிற்சல் ஸ்ரார்க், கிளின்ட்ட மக்காய், ஷேவியர் டொகேர்ட்டி

மேற்கிந்தியத் தீவுகள்:
கிறிஸ் கெயில், கெரன் பவல், ராம்நரேஷ் சர்வான், டெரன் பிராவோ, டுவைன் பிராவோ, கெரான் பொலார்ட், அன்ட்ரே ரசல், டெவோன் தோமஸ், டெரன் சமி, சுனில் நரைன், கேமர் ரோச

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--