2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

பாகிஸ்தானுக்கெதிரான மேற்கிந்தியத் தீவுகள் டுவென்டி டுவென்டி குழாம் அறிவிப்பு

A.P.Mathan   / 2013 ஜூலை 25 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கும், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்குமிடையிலான 2 போட்டிகள் கொண்ட டுவென்டி டுவென்டி தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
13 பேர் கொண்ட மேற்கிந்தியத் தீவுகள் குழாமே அறிவிக்கப்பட்டுள்ளது.
 
டெரன் சமி தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த மேற்கிந்தியத் தீவுகள் குழாமில், அண்மையில் நிறைவடைந்த சிம்பாப்வே அணிக்கெதிரான டுவென்டி டுவென்டி தொடருக்கான குழாமில் இடம்பெற்றிருக்காத கிறிஸ் கெயில், மார்லன் சாமுவேல்ஸ் இருவரும் இடம்பெற்றுள்ளனர்.
 
அத்தோடு, அத்தொடரில் இடம்பெற்றிருந்த அன்ட்ரே ரசல், டினேஷ் ராம்டின் இருவரும் இக்குழாமில் சேர்க்கப்படவில்லை.
 
அறிவிக்கப்பட்டுள்ள குழாம்:
டெரன் சமி, சாமுவேல் பத்ரி, கிறிஸ்தோபர் பார்ன்வெல், ரீனோ பெஸ்ற், டெரன் பிராவோ, டுவைன் பிராவோ, ஜோன்சன் சார்ள்ஸ், ஷனொன் கப்றியல், கிறிஸ் கெயில், கெரான் பொலார்ட், சுனில் நரைன், மார்லன் சாமுவேல்ஸ், லென்டில் சிமன்ஸ்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--