2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

பாகிஸ்தானுக்கெதிராக டுபாயில் விளையாடுகிறது இலங்கை

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 02 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அணி பாகிஸ்தானுக்கெதிரான முழுமையான தொடரொன்றில் பங்குபற்றவுள்ளது. இத்தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெறவுள்ளது.
 
3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், 2 டுவென்டி டுவென்டி சர்வதேசப் போட்டிகள் ஆகியன அடங்கிய தொடராக இத்தொடர் அமையவுள்ளது.
 
டிசெம்பரில் ஆரம்பிக்கவுள்ள இந்தத் தொடர், ஜனவரி 3ஆம் வாரம் வரை இடம்பெறவுள்ளது. முதலில் டுவென்டி டுவென்டி சர்வதேசப் போட்டிகளும், அதன் பின்னர் 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளும், அவற்றைத் தொடர்ந்து 3 டெஸ்ட் போட்டிகளும் இடம்பெறவுள்ளன.
 
முழுமையான போட்டி அட்டவணை
 
டிசெம்பர் 11 -முதலாவது டுவென்டி டுவென்டி - பாகிஸ்தான் எதிர் இலங்கை -டுபாய்
டிசெம்பர் 13 -இரண்டாவது டுவென்டி டுவென்டி - பாகிஸ்தான் எதிர் இலங்கை -டுபாய்
 
டிசெம்பர் 18 -முதலாவது ஒ.நா.ச.போட்டி - பாகிஸ்தான் எதிர் இலங்கை - சார்ஜா
டிசெம்பர் 20 -இரண்டாவது ஒ.நா.ச.போட்டி - பாகிஸ்தான் எதிர் இலங்கை - டுபாய்
டிசெம்பர் 22 -மூன்றாவது ஒ.நா.ச.போட்டி - பாகிஸ்தான் எதிர் இலங்கை - சார்ஜா
டிசெம்பர் 25 - நான்காவது ஒ.நா.ச.போட்டி - பாகிஸ்தான் எதிர் இலங்கை - அபுதாபி
டிசெம்பர் 27 - ஐந்தாவது ஒ.நா.ச.போட்டி - பாகிஸ்தான் எதிர் இலங்கை - அபுதாபி
 
ஜனவரி 31 - முதலாவது டெஸ்ட் - பாகிஸ்தான் எதிர் இலங்கை - டுபாய்
ஜனவரி 8 - இரண்டாவது டெஸ்ட் - பாகிஸ்தான் எதிர் இலங்கை - அபுதாபி
ஜனவரி 16 -மூன்றாவது டெஸ்ட் - பாகிஸ்தான் எதிர் இலங்கை - சார்ஜா

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--