2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

மேற்கிந்தியத் தீவுகள் தொடர் வெற்றி சரியான நேரத்தில் கிடைக்கப்பெற்றது: டேவ் வட்மோர்

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 05 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிராக பாகிஸ்தான் அணி மேற்கிந்தியத் தீவுகளில் வைத்துப் பெற்றுக் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர், டுவென்டி டுவென்டி சர்வதேசப் போட்டித் தொடர் வெற்றிகள் சரியான நேரத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றிகள் என பாகிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளர் டேவ் வட்மோர் தெரிவித்துள்ளார்.
 
அண்மைக்காலத்தில் வெற்றிகளைப் பெற்றுக்கொள்ளத் தவறிவந்த பாகிஸ்தான் அணி, தென்னாபிரிக்காவில் வைத்துப் பெறப்பட்ட தொடர் தோல்வியைத் தொடர்ந்து, சம்பியன்ஸ் கிண்ணத் தோல்விகளையடுத்து அழுத்தத்திற்குள்ளாகியிருந்தது.
 
இந்நிலையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர், டுவென்டி டுவென்டி சர்வதேசப் போட்டித் தொடர் ஆகியவற்றில் பாகிஸ்தான் அணி மிகச்சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தி இரண்டு தொடர்களையும் கைப்பற்றியிருந்தது.
 
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த டேவ் வட்மோர், சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் பெறுபேறுகளையடுத்து பாகிஸ்தான் அணி மீதும், தன் மீதும் தேவையற்ற அழுத்தங்கள் பல கணப்பட்டதாகவும், இதன் காரணமாக மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் சிறப்பாகச் செயற்படுவது அவசியமானதாகக் காணப்பட்டதாகத் தெரிவித்தார்.
 
அணி மீதும், தன் மீதும் காணப்பட்ட அதிகளவு அழுத்தங்கள் தன்னைப் பாதித்ததாகத் தெரிவித்த டேவ் வட்மோர், மேற்கிந்தியத் தீவுகளில் பெறப்பட்ட வெற்றிகள் அந்த அழுத்தங்களைக் குறைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--