2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

இங்கிலாந்து பிறீமியர் லீக் போட்டி முடிவுகள்

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 21 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளில் கடந்த வார இறுதிக்கான போட்டிகளில் ரொட்டென்ஹம் ஹொட்ஸ்பர்ஸ், ஆர்சனல், செல்சீ, எவேர்ட்டன், ஸ்வன்சீ, மன்செஸ்டர் சிட்டி அணிகள் வெற்றிபெற்றன.
 
அஸ்ரன் வில்லா அணிக்கும், ரொட்டென்ஹம் ஹொட்ஸ்பர்ஸ் அணிக்குமிடையிலான போட்டியில் ரொட்டென்ஹம் ஹொட்ஸ்பர்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. ரொட்டென்ஹம் ஹொட்ஸ்பர்ஸ் அணி சார்பாக 31ஆவது நிமிடத்தில் அன்ட்ரோஸ் ரௌன்சென்ட், 69ஆவது நிமிடத்தில் றொபேர்ட்டோ சொல்டடோ ஆகியோர் கோல்களைப் பெற்றனர்.
 
நியூகாசில் யுனைட்டட் அணிக்கும், லிவர்பூல் அணிக்குமிடையிலான போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. நியூகாசில் யுனைட்டட் சார்பாக 23ஆவது நிமிடத்தில் யோஹான் கபாயே, 56ஆவது நிமிடத்தில் போல் டம்மெற் ஆகியோர் கோல்களைப் பெற்றதோடு, லிவர்பூல் சார்பாக 42ஆவது நிமிடத்தில் ஸ்டீவன் கெரார்ட், 72ஆவது நிமிடத்தில் டானியல் ஸ்ரர்ட்ஜ் ஆகியோர் கோல்களைப் பெற்றனர். இப்போட்டியின் 41ஆவது நிமிடத்தில் நியூகாசில் யுனைட்டட் அணியின் மபோ யங்கா பிவா சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டிருந்தார்.
 
ஆர்சனல் அணிக்கும், நோர்விச் அணிக்குமிடையிலான போட்டியில் ஆர்சனல் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. ஆர்சனல் சார்பாக 18ஆவது நிமிடத்தில் ஜக் வில்ஷெயா, 58ஆவது, 88ஆவது நிமிடங்களில் மெசுத் ஒசில், 83ஆவது நிமிடத்தில் ஆரொன் றாம்சே ஆகியோர் கோல்களைப் பெற்றதோடு, நோர்விச் சார்பாக 70ஆவது நிமிடத்தில் ஜொனதன் ஹொவ்சன் கோலொன்றைப் பெற்றார்.
 
செல்சீ அணிக்கும், கார்டிஃப் சிட்டி அணிக்குமிடையிலான போட்டியில் செல்சீ அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. செல்சீ அணி சார்பாக எடன் ஹஸார்ட் 33ஆவது, 83ஆவது நிமிடங்களிலும், 66ஆவது நிமிடத்தில் சாமுவேல் ஒட்டோ ஓ உம், 78ஆவது நிமிடத்தில் ஒஸ்காரும் கோல்களைப் பெற்றனர். கார்டிஃப் சிட்டி அணி சார்பாக 10ஆவது நிமிடத்தில் ஜோர்டன் முட்ச் கோலொன்றைப் பெற்றார்.
 
எவேர்ட்டன் அணிக்கும், ஹள் சிட்டி அணிக்குமிடையிலான போட்டியில் எவேர்ட்டன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. எவேர்ட்டன் சார்பாக 8ஆவது நிமிடத்தில் கெவின் மிராலஸ், 57ஆவது நிமிடத்தில் ஸ்டீவன் பைனார் ஆகியோர் கோல்களைப் பெற்றதோடு, ஹள் சிட்டி அணி சார்பாக 30ஆவது நிமிடத்தில் யனிக் சக்போ கோலொன்றைப் பெற்றுக் கொடுத்தார்.
 
மன்செஸ்டர் யுனைட்டட் அணிக்கும், சௌதம்டன் அணிக்குமிடையிலான போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. மன்செஸ்டர் யுனைட்டட் சார்பாக 26ஆவது நிமிடத்தில் றொபின் வான் பேர்சியும், சௌதம்டன் சார்பாக 89ஆவது நிமிடத்தில் அடம் லலானாவும் கோல்களைப் பெற்றுக் கொடுத்தனர்.
 
ஸ்ரோக் சிட்டி அணிக்கும், வெஸ்ட் ப்ரோம்விச் அல்பியன் அணிக்குமிடையிலான போட்டி கோல்கள் பெறப்படாது சமநிலையில் முடிவடைந்தது.
 
ஸ்வன்சீ சிட்டி அணிக்கும், சண்டர்லான்ட் அணிக்குமிடையிலான போட்டியில் ஸ்வன்சீ அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. அவ்வணி சார்பாக 58ஆவது நிமிடத்தில் ஜொனதன் டீ கஸ்மான், 64ஆவது நிமிடத்தில் போனி வில்பிரைட் ஆகியோர் கோல்களைப் பெற்றதோடு, 57ஆவது, 80ஆவது நிமிடத்தில் சண்டர்லான்ட் வீரர்களின் கால்களில் பட்டு கோல்கள் பெறப்பட்டதால் அவை சண்டர்லான்ட் அணியின் "ஒவ்ண் கோல்கள்" ஆகின.
 
மன்செஸ்டர் சிட்டி அணிக்கும், வெஸ்ட் ஹாம் யுனைட்டட் அணிக்குமிடையிலான போட்டியில் மன்செஸ்டர் சிட்டி அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. அவ்வணி சார்பாக 16ஆவது, 51ஆவது நிமிடத்தில் சேர்ஜியோ அகுவேரோ, 80ஆவது நிமிடத்தில் டேவிட் சில்வா ஆகியோரும், வெஸ்ட் ஹாம் யுனைட்டட் அணி சார்பாக 58ஆவது நிமிடத்தில் றிக்கார்டோ வஸ் ரே ஆகியோரும் கோல்களைப் பெற்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .