2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

கிறிஸ்ரல் பலஸை வென்றது ஃபுல்ஹாம்

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 22 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டச் சுற்றுத் தொடரின் நேற்றைய போட்டியில் ஃபுல்ஹாம் அணி வெற்றிபெற்றது. கிறிஸ்ரல் பலஸ் அணிக்கெதிரான இப்போட்டியில் ஃபுல்ஹாம் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
 
செல்ஹேர்ஸ்ற் பார்க் மைதானத்தில் இப்போட்டி இடம்பெற்றது.
 
போட்டி ஆரம்பித்த 7ஆவது நிமிடத்திலேயே கிறிஸ்ரல் பலஸ் அணியின் அட்ரியன் ஜோசப் மரியப்பா கோலொன்றைப் பெற்றுக் கொடுக்க, அவ்வணி 1-0 என்ற முன்னிலையைப் பெற்றது.
 
எனினும் 19ஆவது நிமிடத்தில் ஃபுல்ஹாம் அணியின் பஜ்ரிம் கசாமி கோலொன்றைப் பெற்று கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார். அத்தோடு முதற்பாதியின் இறுதி நிமிடத்தில் ஃபுல்ஹாம் அணியின் ஸ்டீவ் சிட்வெல் கோலொன்றைப் பெற்றுக் கொடுக்க, முதற்பாதி முடிவில் அவ்வணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
 
இரண்டாவது பாதியில் மேலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபுல்ஹாம் அணி, போட்டியின் 50ஆவது நிமிடத்தில் டிமிற்றர் பேர்பட்டோவின் கோலின் உதவியுடனும், 55ஆவது நிமிடத்தில் பிலிப்பே சென்டரோஸின் கோலின் உதவியுடனும் 4-1 என்ற முன்னிலையைப் பெற்றது.
 
அதன் பின்னர் இரு அணிகளும் கோல் எதனையும் பெற்றுக் கொள்ளாது போக, இப்போட்டியில் ஃபுல்ஹாம் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--