2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

நியூசிலாந்திற்கெதிராக பங்களாதேஷ் சிறப்பான ஆட்டம்

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 24 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணிக்கும், பங்களாதேஷ் அணிக்குமிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2ஆவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் முடிவில் பங்களாதேஷ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.
 
தனது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஷ் அணி இன்றைய நாள் முடிவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 269 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
 
39 ஒட்டங்களுக்கு முதலாவது விக்கெட்டையும், 2ஆவது விக்கெட்டை 55 ஓட்டங்களுக்கு இரண்டாவது விக்கெட்டையும் இழந்த அவ்வணி, 3ஆவது விக்கெட்டுக்காக 157 ஓட்டங்களைப் பகிர்ந்தது. அதன் காரணமாக அவ்வணி முன்னிலையைப் பெற்றது.
 
துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணி சார்பாக மொமினுல் ஹக் ஆட்டமிழக்காமல் 126 ஓட்டங்களையும், தமிம் இக்பால் 70 ஓட்டங்களையும், ஷகிப் அல் ஹசன் ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களையும் பெற்றனர்.
 
பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக நீல் வக்னர் 2 விக்கெட்டுக்களையும், கேன் வில்லியம்சன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
 
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடியிருந்த பங்களாதேஷ் அணி 282 ஓட்டங்களைப் பெற்றதோடு, நியூசிலாந்து அணி தனது முதலாவது இனிங்ஸில் 437 ஓட்டங்களையும் பெற்றிருந்தது.
 
இதன்படி, 7 விக்கெட்டுக்கள் கைவசமிருக்கும் நிலையில் பங்களாதேஷ் அணி 114 ஓட்டங்களால் முன்னிலை வகிக்கிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--