2021 மார்ச் 08, திங்கட்கிழமை

நியூசிலாந்துக்கு இரண்டாவது வெற்றி

A.P.Mathan   / 2014 மார்ச் 29 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து அணி உலக 20-20 தொடரின் இரண்டாம் சுற்றில் நெதர்லாந்து அணியை வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி தனக்கான அரை இறுதி வாய்ப்பை தக்க வைத்துள்ள அதேவேளை, நெதர்லாந்து அணி தனக்கான அரை இறுதி வாய்ப்பை இழந்துள்ளது. நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றி பெற்றுக்கொள்ளும் அணி அரை இறுதி வாய்ப்பை பெற்றுக் கொள்ளும்.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 151 ஓட்டங்களைப் பெற்றது. இதில் பீற்றர் பொரன் 49 ஓட்டங்களையும், டொம் கூப்பர் ஆட்டமிழக்காமல் 40 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் கைல் மில்ஸ், ட்ரென்ட் போல்ட், நேதன் மக்கலம், மிச்சல் மக்ளனகன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பாடிய நியூசிலாந்து அணி 19 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 152 ஓட்டங்களைப் பெற்றது. இதில் பிரன்டன் மக்கலம் 65 ஓட்டங்களையும், கேன் வில்லியம்சன் 29 ஓட்டங்களையும் பெற்றனர். பிரன்டன் மக்கலம் 20-20 போட்டிகளில் 2000 ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை தனதாக்கிக் கொண்டார். பந்துவீச்சில் வன் டேர் குக்டென் 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். போட்டியின் நாயகனாக பிரன்டன் மக்கலம் தெரிவானார். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 4 புள்ளிகளைப் பெற்று குழு 01 இல் நான்கு புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .